1 Chronicles 1
1ஆதாம், சேத், ஏனோஸ், 2கேனான், மகலாலெயேல், யாரேத், 3ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, 4நோவா, சேம், காம், யாப்பேத், 5யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள். 6கோமருடைய மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள். 7யாவானுடைய மகன்கள், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். 8காமின் மகன்கள், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள். 9கூஷின் மகன்கள், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் மகன்கள், சேபா, திதான் என்பவர்கள். 10கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பலசாலியானான். 11மிஸ்ராயிம் லூதீமியர்களையும், ஆனாமியர்களையும், லெகாபியர்களையும், நப்தூகியர்களையும், 12பத்ரூசியர்களையும், பெலிஸ்தர்களைப் பெற்ற கஸ்லூகியர்களையும், கப்தோரியர்களையும் பெற்றான். 13கானான் தன்னுடைய மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும், 14எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும், 15ஏவியர்களையும், அர்கீயர்களையும், சீனியர்களையும், 16அர்வாதியர்களையும், செமாரியர்களையும், காமாத்தியர்களையும் பெற்றான். 17சேமின் மகன்கள், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள். 18அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான். 19ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுடைய பெயர் பேலேகு, ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான். 20யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும், 21அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும், 22ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும், 23ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும், பெற்றான்; இவர்கள் எல்லோரும் யொக்தானின் மகன்கள். 24சேம், அர்பக்சாத், சாலா, 25ஏபேர், பேலேகு, ரெகூ, 26செரூகு, நாகோர், தேராகு, 27ஆபிராமாகிய ஆபிரகாம். 28ஆபிரகாமின் மகன்கள், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள். 29இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த மகனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம், 30மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா, 31யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் மகன்கள். 32ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற மகன்கள் சிம்ரான், யக்க்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்க்ஷானினுடைய மகன்கள் சேபா, தேதான் என்பவர்கள். 33மீதியானின் மகன்கள் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லோரும் கேத்தூராளின் மகன்கள். 34ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் மகன்கள் ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள். 35ஏசாவின் மகன்கள் எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள். 36எலீப்பாசினுடைய மகன்கள் தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள். 37ரெகுவேலினுடைய மகன்கள் நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள். 38சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள். 39லோத்தான் மகன்கள் ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள். 40சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள். 41ஆனாகின் மகன்களில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் மகன்கள் அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள். 42திஷானின் மகன்கள் பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; ஏத்சேரின் மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள். 43இஸ்ரவேலர்களை ஒரு இராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட இராஜாக்கள்: பேயோரின் மகன் பேலா என்பவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் தின்காபா. 44பேலா இறந்தபின்பு போஸ்ரா ஊரைச்சேர்ந்த சேராகின் மகன் யோபாப் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். 45யோபாப் இறந்தபின்பு, தேமானியர்களுடைய தேசத்தானாகிய ஊசாம் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். 46ஊசாம் இறந்தபின்பு, பேதாதின் மகன் ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான், இவன் மீதியானியர்களை மோவாபின் நாட்டிலே தோற்கடித்தவன்; இவனுடைய பட்டணத்தின் பெயர் ஆவீத். 47ஆதாத் இறந்தபின்பு, மஸ்ரேக்கா ஊரைச்சேர்ந்த சம்லா அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். 48சம்லா இறந்தபின்பு, நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். 49சவுல் இறந்தபின்பு, அக்போரின் மகன் பாகாலானான் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான். 50பாகாலானான் இறந்தபின்பு, ஆதாத் அவன் இருந்த இடத்தில் இராஜாவானான்; இவனுடைய பட்டணத்தினுடைய பெயர் பாகி; மேசகாபின் மகளாகிய மாத்திரேத்தின் மகளான அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல். 51ஆதாத் இறந்தபின்பு, ஏதோமை அரசாண்ட பிரபுக்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு, 52அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு, 53கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு, மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள். 54
Copyright information for
TamULB